செய்திகள் :

Guinea: கால்பந்து விளையாட்டில் ரசிகர்களிடையே மோதல்; 100 பேர் மரணித்திருக்கலாம்... என்ன நடந்தது?

post image

கினியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான செரீகோர் நகரில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையில் நடந்த மோதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

AFP செய்தித் தளம் வெளியிட்டள்ள அறிக்கையின்படி, பெயரை வெளிப்படுத்த விரும்பாத மருத்துவர் ஒருவர் மருத்துவமனையின் நிலையை விளக்கியுள்ளார். அவர், "மருத்துவமனை முழுவதும் உடல்களால் நிறைந்திருக்கிறது. நடைபாதைகளிலும் உடல்களை வைத்திருக்கின்றனர். பிணவறை நிரம்பிவிட்டது." என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 100 பேர் மரணமடைந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டிக்குப் பிறகு நடந்த கலவரம் என சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவிவருகின்றன. இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.

நடந்த கலவரத்தில் செரீகோர் காவல்நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கினியாவின் ராணுவத் தலைவரான மமதி டூம்பூயாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடத்தப்பட்ட கால்பந்து போட்டியிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன. மமதி டூம்பூயா 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கினியாவின் அதிபராக தன்னை நியமித்துக்கொண்டவர்.

போத்தியில் நடுவரின் குறிப்பிட்ட முடிவு விவாதத்தை எழுப்பியதே மோதல்களுக்குக் காரணம் என்கின்றனர்.

சர்சதேச சட்டங்களின்படி, டும்பூயா 2024ம் ஆண்டே குடிமக்களில் ஒருவருக்கு அதிபர் பதவியை அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை, 2025 நிச்சயம் கினியாவில் தேர்தல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

தேர்தலில் வெற்றிபெறுபவர் தலைமையில் அரசியலமைப்பு சட்ட அடிப்படையிலான ஆட்சி நடைபெறும்.

மேற்கு ஆப்ரிக்காவில் 2020ம் ஆண்டுக்குப் பிறகு மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய நாடுகளில் ராணுவத் தலைவர்கள் பதவிக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"அவர் எதிர்கட்சித் தலைவர் குற்றம் சொல்வது அவரின் கடமை"- முதல்வர் ஸ்டாலின் கூறியதென்ன?

ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நிலவரம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நான்கு ரோடு சாலை கடை காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் போன்றவற்றில் மழை நீர் சூழ்ந்தது. இந்த மழை நீரால் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள... மேலும் பார்க்க

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: வசமாக சிக்கிக் கொண்டதா திமுக அரசு?!

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த மதுரை - அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்திருக்கிறது. இதற்கு பொதுமக்கள், விவச... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : `ஊத்தங்கரையும் தமிழ்நாட்டில்தான் உள்ளது முதல்வரே' - அவல குரல்

பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரை பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்... மேலும் பார்க்க

அம்பேத்கரை அறிவோம்: அரசியலமைப்பின் தந்தையாக என்ன செய்தார் அம்பேத்கர்?

அவர் மறைந்து ஆண்டுகள் அறுபது ஆகிவிட்டது. ஆனபோதிலும் நாட்டின் வளர்ச்சி குறித்த விவாதங்களில் எல்லாம், இன்றளவும் தவிர்க்க முடியாத ஒருவராய் விளங்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.ஓரிரு பகுதிகளில் என்றில்லாமல், ... மேலும் பார்க்க

America: கைகொடுத்த நம்பிக்கை... பரிந்துரைத்த ட்ரம்ப்; FBI இயக்குநராக காஷ் படேல் `டிக்' ஆனது எப்படி?!

கடந்த மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அதில் ஒன்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இயக்குநராக, தனக்கு நெ... மேலும் பார்க்க