"அவர் எதிர்கட்சித் தலைவர் குற்றம் சொல்வது அவரின் கடமை"- முதல்வர் ஸ்டாலின் கூறியத...
கிருஷ்ணகிரி : `ஊத்தங்கரையும் தமிழ்நாட்டில்தான் உள்ளது முதல்வரே' - அவல குரல்
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரை பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வீட்டுக்குள் நீர் புகுந்தது மட்டும் அல்லாமல் அங்கு வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள்.
சமுத்திரமான சாலைகள்
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி மற்றும் சேலம் மேம்பாலம், திருவண்ணாமலை மேம்பாலம் முழுவதும் மழைநீரில் மூழ்கியுள்ளது. கிருஷ்ணகிரி பழையபேட்டையில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
அணைகளின் அபாய சூழல்
பாம்பாறு அணையின் நீர்வரத்து திடீரென 15,000 கன அடிக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மொத்த நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பாம்பாறு அணை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள்
மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தற்பொழுது ஊத்தங்கரை சுற்றுப்பகுதிகளில் நேரடியாகச் சென்று மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்.
ஊத்தங்கரையும் தமிழ்நாட்டில்தான் உள்ளது முதல்வரே
விகடனிடம் பேசிய ஊத்தங்கரையை சேர்ந்த சிவகுருநாதன், "இது மிகவும் பின்தங்கிய பகுதி. எனக்கு நினைவு தெரிந்து கடந்த பத்து ஆண்டுகளில் இப்போதுதான் ஊடகத்தின் தலைப்பு செய்திகளில் வருகிறோம். ஒரு காலத்தில் நக்சல் ஆதிக்க பகுதியாக அறியப்பட்ட இந்த ஊரை தமிழ்நாட்டில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். உண்மையில் அது எங்களுக்கு பிரச்னை அல்ல. குறைந்தபட்சம் முதல்வருக்காவது இப்படி ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று தெரியுமா? சென்னையும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு மட்டும்தான் அவர் முதல்வரா? அவர் விழுப்புரம் சென்று இருப்பதை அறிகிறோம். மகிழ்ச்சி. அவர் எங்கள் பகுதிக்கும் வந்து எங்கள் நிலையை அறிய வேண்டும். உரிய இழப்பீடு தர வேண்டும்," என்றார்
Social Influencerஆல் வழிநடத்தப்படும் ஆட்சி
பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், "சமூக உடகங்களில் influencers யாரவது பிரச்னைகளை வெளியிட்டால், அந்த பகுதிகளில் துரிதமாக பணியாற்றுகிறது அரசு நிர்வாகம். ஆனால், உடல் உழைப்பாளர்கள் நிரம்பிய இப்பகுதிகளில் social influencers யாரும் இல்லை. அதனால் எங்கள் பிரசனைகளும் அரசு தெரியவில்லை போலும்," என்றார்.
``இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது #DravidianModel ஆட்சிக்காலம்!" - இது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியதற்காக முதல்வர் ஸ்டாலின் போட்ட அவசர பதிவு. மழையின், புயலின் உண்மையான பாதிப்பை விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என மாநிலத்தின் பல மாவட்டங்கள் சந்தித்துகொண்டு இருக்கும் போது அதிகம் பாதிக்காக சென்னையை இயல்பு நிலைக்கு திருப்பியதாக சொல்வதெல்லாம் தான் உங்கள் சாதனையா?
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...