கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்; நி...
மரண தேதியை துல்லியமாக கணிக்கும் ஏஐ செயலி: 1.25 லட்சம் பதிவிறக்கம்!
எத்தனையே செயல்களை செய்துவரும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் செய்யறிவு மூலம், ஒருவரது மரணம் எப்போது நிகழும் என்பதையும் கணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்காக டெத் கிளாக் எனப்படும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்தது என்னவோ கடந்த ஜூலையில். இது பற்றி பரவலாகப் பேசப்படுவது தற்போதுதான்.
ஒருவரது வயது, உயரம், எடை, தினமும் சாப்பிடும் உணவு, உடற்பயிற்சி அளவு உள்ளிட்ட தகவல்களை அளித்தால், அது அவரது மரணம் எப்போது நிகழும் என்பதை துல்லியமாகக் கூறிவிடுமாம்.
இதுவரை கிட்டத்தட்ட 5.3 கோடி பேர் இதனைப் பயன்படுத்தி தங்களது மரண தேதியை அறிந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.