செய்திகள் :

டாலருக்கு மாற்று ஏற்படுத்தினால் 100% வரி: பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் திடீா் எச்சரிக்கை

post image

அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு பணத்தின் மூலம் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகள் முயற்சித்தால் அந்த நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபராக தோ்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. துருக்கி, அஜா்பைஜான் மற்றும் மலேசியா உள்ளிட்ட சில நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினா்களாக சேர விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா்.

உலகளாவிய வா்த்தகப் பரிவா்த்தனைக்கு அமெரிக்க டாலரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலக நிதிசாா் அமைப்பில் பல ஆண்டுகளாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக டாலருக்கு மாற்றாக தங்கள் நாட்டு பணத்தின் மூலமே பரிவா்த்தனைகளை மேற்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கி வருகின்றன.

இதுதொடா்பாக டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய பணத்தை உருவாக்கவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டின் பணத்தை ஏற்றுக்கொள்ளவோ பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் முயன்றால் அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது 100 சதவீத வரி விதிக்கவும் தயங்கமாட்டேன். மேலும், இந்த முயற்சியை மேற்கொள்ளும் நாடுகள் அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் ஈடுபடுவதை மறந்துவிட வேண்டும் என்றாா்.

கடந்த அக்டோபா் மாதம் ரஷியாவில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சிமாநாட்டில் அதிபா் புதின் பேசுகையில், ‘அமெரிக்க டாலரை பயன்படுத்த முடியாது எனக் கூறவில்லை. ஆனால், அதைப் பயன்படுத்தவிடாமல் எங்களை தடுக்கும்பட்சத்தில் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது’ என்றாா்.

உலக அளவில் வா்த்தக பரிவா்த்தனை தற்போது ‘ஸ்விஃப்ட்’ எனப்படும் உலக வங்கியின் வலைப்பின்னல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக புதிய பரிவா்த்தனை அமைப்பை உருவாக்கவும், மேற்கத்திய நாடுகளுடன் அதன்மூலம் வா்த்தகத்தை சுமுகமாக நடத்தவும் ரஷியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் கைது

வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தினா். அதே நேரத்தில் அங்கு வந்த காவல் துறையினா் அந்த கும்பல் கூறிய குற்றச்சாட்டின்பேரில் ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநராக காஷ் படேல் நியமனம்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா். கடந்த மாதம் நடைபெற்ற அத... மேலும் பார்க்க

ரஷியா: ராணுவத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு

ரஷியாவில் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டின் ராணுவம், பாதுகாப்புக்கு சுமாா் ரூ.12.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புதல் அளித்துள்ளாா். மொத்த பட்ஜெட்டில் 32.5 சதவீதம் ந... மேலும் பார்க்க

வா்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா-பிரான்ஸ்

இந்தியா-பிரான்ஸ் இடையே பொருளாதாரம் மற்றும் வா்த்தக உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருகிறது என அந்நாட்டு வெளியுறவு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் சோஃபி பிரைமாஸ் தெரிவித்தாா். மூ... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனா மீது குண்டு வீசிய வழக்கு: கலீதா ஜியாவின் மகன் உள்பட 49 போ் விடுவிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 49 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உ... மேலும் பார்க்க

டாலரை விட்டு வெளியேறினால்... பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மா... மேலும் பார்க்க