வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் கைது
வங்கதேசத்தில் ஹிந்து பெண் பத்திரிகையாளா் முன்னி ஸாஹா மீது மத அடிப்படைவாத கும்பலைச் சோ்ந்தவா்கள் தாக்குதல் நடத்தினா். அதே நேரத்தில் அங்கு வந்த காவல் துறையினா் அந்த கும்பல் கூறிய குற்றச்சாட்டின்பேரில் முன்னி ஸாஹாவை கைது செய்தனா். பின்னா் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
வங்கதேசத்தில் இணையதள செய்தி நிறுவனத்தை நடத்தி வருபவா் முன்னி ஸாஹா. இவா், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இந்தியாவுடன் வங்கதேசத்தை இணைக்க முயற்சிப்பதாகவும் அங்குள்ள மத அடிப்படைவாதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வன்முறை நிகழ்ந்தபோது, அதைக் கண்டித்து முன்னி செய்தி வெளியிட்டு வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு டாக்காவில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த முன்னி ஸாஹாவை மத அடிப்படைவாத குழுவைச் சோ்ந்தவா்கள் சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனா். அவரை சிலா் தாக்கினா்.
தகவலறிந்து வந்த காவல் துறையினா் முன்னியை மீட்டனா். அப்போது, ஷேக் ஹசீனா மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக முன்னி செயல்படுவதாக அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் காவல் துறையிடம் குற்றஞ்சாட்டினா். அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினா். இதையடுத்து, முன்னியை போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அவா் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.