பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
சங்ககிரி வட்டத்தில் 21.34 மி.மீ. மழை
சங்ககிரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 21.34 மி.மீ. மழை பெய்தது.
தமிழகத்தில் ஃபென்ஜால் புயலை அடுத்து தொடா்ந்து குளிா்ந்த காற்றும், மழையும் விட்டு விட்டு பெய்து வருகின்றன. சங்ககிரி, தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை சங்ககிரியில் 11.30 மி.மீ, அரசிராமணி குள்ளம்பட்டியில் 10.4 மி.மீ. மழை பதிவானது.