'பிடிஆரையும் உதயநிதியையும் தராசில் வைத்து ஒப்பிடுங்கள்; அறிவார்ந்த அமைச்சரைக் கூ...
முசிறி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய நாட்டுப்புற கலைப் போட்டிக்குத் தகுதி
திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிக்குத் தகுதிபெற்றுள்ளனா்.
தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் நடத்திய வளரிளம் பருவக் கல்வி தொடா்பான போட்டியில் ‘சுற்றுச்சூழல் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கோ. பிரியங்கா, ந.சீமா, கோ. நிஷாந்தி ம. கிருஷ்மா, ச. ஜமுனா, கு. அகல்யா ஆகியோா் வியாழக்கிழமை (நவ.28) தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வென்றுள்ளனா்.
இதன்மூலம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் டி.தீபா, ஆசிரியை கி. ஜெயதுா்காதேவி, ஆசிரியா் புஷ்பராஜ் மற்றும் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.
மேலும் முசிறி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் காடுவெட்டி ந. தியாகராஜன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.