செய்திகள் :

Rain Alert : இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

post image

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும், தமிழ்நாட்டில் மழை இன்னும் விட்டபாடில்லை.

நேற்று வானிலை மையம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் அறிவித்தது.

கனமழை...

வானிலை மையம் குறிப்பிட்ட பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால், திருவண்ணாமலை,கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி பகுதிகளிலும், நாமக்கல்லில் கொல்லிமலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Fengal Cyclone: கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழை; புதுச்சேரியைப் புரட்டிய புயல் | பாதிப்பு வீடியோக்கள்

புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் மீட்டு படகில் கொண்டு செல்கின்றனர்ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஃபெஞ்சல் புயல் கன மழையால் சாலைகளில் வெள்... மேலும் பார்க்க

Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11:30 மணியளவில் கரையைக் கடந்தது. இந்த நிலையில், கரையைக் கடந்த புயல் தற்போது புதுச்சேரியில் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்... மேலும் பார்க்க

Fengal: `போக்கு காட்டும் ஃபெஞ்சல்... கடந்து வந்த பாதை டு லேட்டஸ்ட் அப்டேட்'| Full Detail

'வருமா...வராதா' என்று ஆரம்பத்தில் இருந்து ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயலின் கடந்து வந்த பாதை இதோ...டெல்டாவில் மழை...இந்த வாரம் திங்கள்கிழமை, வானிலை ஆய்வு மையம் முதன்முதலாக ஃபெஞ்சல் புயல் ... மேலும் பார்க்க