மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 7,414 கனஅடியாக திங்கள்கிழமை காலை அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,195 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7,414 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியிலிருந்து 110.93 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 79.73 டிஎம்சியாக உள்ளது.
மழையளவு 44 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது.