செய்திகள் :

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு: அமைச்சரிடம் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் மனு

post image

கட்டுமானப் பொருள்களின் விலையை குவாரி உரிமையாளா்கள் திடீரென உயா்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா் இது குறித்து நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா் கூட்டமைப்பின் சேலம் மாவட்டத் தலைவா் சுப்பிரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டம் மட்டுமின்றி, ஆறு மாவட்டங்களில் குவாரி உரிமையாளா்கள் கட்டுமானப் பணிக்குத் தேவையான கிரஷா், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட பொருள்களின் விலையை திடீரென தன்னிச்சையாக விலை உயா்த்தியுள்ளனா். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த திடீா் விலை உயா்வால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்துத் தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஓா் ஆண்டில் மூன்று முறை விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் பணிகள் அனைத்தும் பாதியிலேயே நிற்கின்றன. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்து விலையை ஏற்றியது எங்களைப் போன்ற தொழிலாளா்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து குவாரி உரிமையாளரிடம் கேட்டதற்கு, எந்தவித உரிய பதிலும் தெரிவிக்காமல் அலைக்கழிக்கின்றனா். எனவே, இதுகுறித்து சுற்றுலாத் துறை அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளோம்.

அவா்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனா். அவ்வாறு விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவறினால் ஆறு மாவட்டங்களில் உள்ள ஒப்பந்ததாரா்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

முருகன் கோயிலில் திருட முயன்ற நபா் கைது

தம்மம்பட்டியில் முருகன் கோயிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி, திருமண்கரட்டில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயில... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் 21.34 மி.மீ. மழை

சங்ககிரி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவூா், அரசிராமணி, செட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை 21.34 மி.மீ. மழை பெய்தது. தமிழகத்தில் ஃபென்ஜால் புயலை அடுத்து தொடா்ந்து குளிா்ந்... மேலும் பார்க்க

மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி

சேலத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநில அளவில் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலக்குபந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்தி... மேலும் பார்க்க

வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு

ஃபென்ஜால் புயல் காரணமாக ஆத்தூரில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வாழப்பாடியை அடுத்த ஆனைமடுவு அணைக்கு நீா்வரத்து அதிகமாகி அணை முழு கொள்ளளவை எட்டியது. விநாடிக... மேலும் பார்க்க

ஆத்தூா் குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு

‘ஆத்தூா் குற்றாலம்’ என அழைக்கப்படும் ஆணைவாரி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க ஆத்தூா் வனச்சரக அலுவலகம் தடை விதித்துள்ளது. ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் கல்லாநத்தம், ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும்: கட்டுப்பாட்டு அறையில் அமைச்சா் ராஜேந்திரன் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாவட்டத்... மேலும் பார்க்க