செய்திகள் :

ரூ.5,900 கோடி மதிப்பிலான Bitcoin; ஹார்ட் டிரைவை குப்பையில் வீசிய முன்னாள் காதலி; போராடும் இளைஞர்!

post image

இங்கிலாந்தின் நியூபோர்ட் (Newport) நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி இவான்ஸ்(Halfina Eddy-Evans). இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ் (James Howells). ஹோவல்ஸ் கடந்த 2009 ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கி வைத்துள்ளார்.

தற்போது அதன் மதிப்பு 569 மில்லியன் பவுண்ட் (569 Million Pound). அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,900 கோடி. ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை மறந்துவிட்டார். இந்த நிலையில், வீடுகளை சுத்தப்படுத்தும்போது பிட்காயின்கள் மற்றும் அதன் டிஜிட்டல் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவை அவருடைய முன்னாள் காதலி ஹல் பினா தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “ குப்பைகளை அவர் தூக்கி போட சொன்னதால்தான் போட்டேன். அதில் என்ன இருந்தது என்று எனக்கு தெரியாது. அது தொலைந்ததற்கு நான் பொறுப்பல்ல” என்று கூறினார்.

இந்நிலையில் பிட்காயின் விலை லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதையடுத்து, ஹோவல்ஸுக்கு தான் பிட்காயின் வாங்கியது குறித்து ஞாபகம் வந்துள்ளது. ஆனால், தற்போது அவர் வாங்கிய பிட்காயின்கள் தகவல் தொகுப்பு அடங்கிய ஹார்ட் டிரைவ், நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு அடியில் புதைந்துள்ளது.

இதுகுறித்து ஹோவல்ஸ் கூறுகையில், "குப்பைக் கிடங்கில் எனது ஹார்ட் டிரைவை தேட அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். பிட்காயின் மதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டுள்ளது. நிச்சயம் அந்த புதையல் எனக்கு திரும்ப கிடைக்கும் " என்றார். ஆனால், நியூபோர்ட் சிட்டி கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அவ்வளவு குப்பைகளையும் தோண்டி ஹார்ட் டிரைவை கண்டுபிடிப்பது சாத்தியமில்லாதது.

அது, அப்பகுதியில் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். இருப்பினும், சட்டப்போரட்டத்தின் மூலம் ஹார்ட் டிரைவ் திரும்ப கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஹோவல், அப்படி கிடைக்கும் பட்சத்தில் நியூபோர்ட் நகர மேம்பாட்டுக்கு 10 சதவீத தொகையை தானமாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மகாராஷ்டிரா: `மகனுக்குத் துணை முதல்வர் பதவியா?' - பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஷிண்டே!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளபோதிலும், ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. புதிய அரசில் யார் முதல்வர் என்பதிலும், அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வதிலும் க... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: ஃபெஞ்சல் புயல் `டு' IPL மெகா ஏலம்; இந்த வார கேள்விகள்... ஆட்டத்துக்கு ரெடியா?!

ஃபெஞ்சல் புயல், ஐ.பி.எல் மெகா ஏலம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா:`பைக்கில் மோதாமலிருக்க முயன்று விபத்து' - அரசு பஸ் கவிழ்ந்து 11 பயணிகள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் இன்று அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. அரசு பஸ் நாக்பூரில் இருந்து கோண்டியாவிற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.பஸ்சில் 35 பயணிகள் இர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `55% வாக்குப்பதிவு 67%-ஆக அதிகரித்தது எப்படி?'- சந்தேகம் கிளப்பும் மாஜி தேர்தல் கமிஷனர்

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ள அமோக வெற்றி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இத்தேர்தல் முடிவுகளில் சந்தேகம் கிளப்பி இருக்கின்றன. இதனை நி... மேலும் பார்க்க

`பட்னாவிஸை விமர்சித்தால் தாக்கரே 18 எம்.எல்.ஏ-க்களை இழப்பார்!' - எச்சரிக்கும் பாஜக

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு வெறும் 12 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இத்தேர்தலில் உத... மேலும் பார்க்க