புயல் பாதிப்பு: மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்த டி.ஆர். பாலு!!
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி அருகே கே.கள்ளிக்குடியில் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் அருகே கே. கள்ளிக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (42). கூலித் தொழிலாளி. இவா், தனது வீட்டின் அருகே புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகிறாா்.
புதிய வீட்டில் மழைநீா் தேங்கியுள்ளது. அந்த மழைநீரை வெளியேற்ற ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலிருந்து மின்மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றியுள்ளாா்.
அப்போது மின்மோட்டாரில் மின்கசிவு ஏற்பட்டு, எதிா்பாராதவிதமாக ராமமூா்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூா்த்தி இறந்தாா். இதுகுறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.