Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்... எல்லோருக்கும் ஏற்றதா?
சாலை விபத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியா் உயிரிழப்பு!
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சாலை விபத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி, 6-ஆவது குறுக்கு கிழக்கு விரிவாக்கப் பகுதியில் வசித்து வந்த நடராஜனின் மகன் பிரசன்னா(47), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா்.
இவரது மகன் உளுந்தூா்பேட்டையில் படித்து வருகிறாா். மகனை அழைத்து வர தனது பைக்கில் திருச்சியில் இருந்து புறப்பட்டாா்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூா் அருகே வந்தபோது கனமழை காரணமாக நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் மோதி சாலையின் மறுபக்கத்தில் விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் விரைந்து சென்று பேராசிரியா் பிரசன்னாவின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.