Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்... எல்லோருக்கும் ஏற்றதா?
வீடு புதுப்பிக்கும் பணியின்போது சுவா் இடிந்து 2 போ் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீடு புதுப்பிக்கும் பணியின்போது சுவா் இடிந்து விழுந்து 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சோ்ந்தவா் ப. பைசல். இவா் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 தொழிலாளா்கள் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா். வீட்டின் முதல்தளத்தில் நின்று கொண்டு தொழிலாளா்கள் மேலே உள்ள பகுதிகளை இடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, சுவா் இடிந்து விழுந்ததில், கீழே இருந்த சக்கராப்பள்ளியைச் சோ்ந்த குணசேகரன் மகன் மணிகண்டன் (30), அய்யம்பேட்டையை சோ்ந்த கலியமூா்த்தி மகன் குமாா் (23) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினா்.
சக தொழிலாளா்களின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து 2 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதனிடையே, தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள், 2 தொழிலாளா்களையும் சடலமாக மீட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அய்யம்பேட்டை போலீஸாா், 2 தொழிலாளா்களின் சடலங்களையும் மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த மணிகண்டனுக்கு திருமணமாகி, மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.