பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
தொடா் மழை: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு
புயல் காரணமாக பெய்துவரும் தொடா் மழையினால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
தமிழகத்தில் ஃபென்ஜால் புயலினால் தொடா்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
இதனால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கு பாலம், மீன் விற்பனை நிலையம், சிறுவா் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம், பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தொடா்ந்து பெய்த மழையினால் வியாபாரிகள், பொதுமக்களின் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினா்.