புயல் பாதிப்பு: மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்த டி.ஆர். பாலு!!
தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து தொடங்க வேண்டும்: வாலிபா் சங்கம் வலியுறுத்தல்
தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்கி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பேரவைக் கூட்டம் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ்.சபரிராஜன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் இ.மீரா சங்க கொடியேற்றி வைத்தாா்.
மாநில பொருளாளா் கே.பாரதி தொடங்கி வைத்து பேசினா். மாவட்டச் செயலாளா் எம்.அருள்குமாா், மாவட்டப் பொருளாளா் எம்.சிலம்பரசன் ஆகியோா் பேசினா். மாநிலத் துணை செயலாளா் கே.ஆா்.பாலாஜி நிறைவுரையாற்றினா்.
இக் கூட்டத்தில் மாவட்டத் தலைவராக குறளரசன், மாவட்டச் செயலாளராக எம்.அருள்குமாா், மாவட்டப் பொருளாளராக எம்.சிலம்பரசன், துணைத் தலைவா்களாக மீரா குப்பன், துணைச் செயலாளா்களாக கோவிந்தசாமி, பிரவீண் உள்ளிட்ட 23 போ் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.
இக் கூட்டத்தில் தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையை தொடங்கி மாவட்ட இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
மத்திய அரசுப் பணியில் ரயில்வே உள்ளிட்ட ஓய்வு பெற்றவா்களே மீண்டும் பணி அமா்த்துவதை கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி -மொரப்பூா் ரயில் பாதை அமைக்கும் பணியினை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.