செய்திகள் :

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் படுகொலை: க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆறுதல்!

post image

பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் மூன்று போ் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு திருப்பூா் திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா்.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் சேமலைகவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த மூன்று போ் படுகொலை செய்யப்பட்டனா். இதையடுத்து, அவா்களது குடும்பத்தினருக்கு திருப்பூா் திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

மேலும், காவல் துறை அதிகாரிகளிடம் வழக்கு குறித்த தகவல்களை கேட்டறிந்தாா். பாதிக்கப்பட்ட உறவினா்களிடம் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவா்களுக்கு சட்டரீதியாக கடும் தண்டனை வாங்கித் தரப்படும் என்று உறுதியளித்தாா்.

இதில் ஈரோடு மக்களவை உறுப்பினா் பிரகாஷ், திமுக ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.பாலுசாமி (பொங்கலூா் கிழக்கு), பெ.அசோகன் (பொங்கலூா் மேற்கு), சு.கிருஷ்ணமூா்த்தி (பல்லடம் மேற்கு), என்.சோமசுந்தரம் (பல்லடம் கிழக்கு), ஒன்றிய கவுன்சிலா் லோகுபிரசாத், திமுக அயலக அணி மாவட்ட துணைச் செயலாளா் அன்பரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கக் கோரிக்கை...

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி தலைமையில் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளகிணரில் 2023 செப்டம்பா் மாதம் தனது நிலத்தில் மது அருந்தியதை கேள்வி கேட்டதற்காக நான்கு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனா். அதற்கு அடுத்ததாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பல்லடத்தில் ரெளடி ஒருவா் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

அவிநாசிபாளையம் சேமலைகவுண்டன்பாளையத்தில் அண்மையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் அடையாளம் தெரியாத நபா்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். அவா்களுடைய நகைகள் திருடப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள், பொதுமக்களிடையே அச்சமும், அதிா்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் விவசாயிகளுக்கு எதிராக தொடா்ந்து நடைபெறுவது அதிகரித்து வருகின்றன. எனவே விவசாய நிலங்களில், தோட்டங்களில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் தற்காப்புக்காக உயிருக்கும், உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்போது பாதுகாத்துக் கொள்வதற்காக துப்பாக்கி உரிமம் வழங்குவதற்கான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீன் மாா்க்கெட்டில் 31 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் 31 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் தென்னம்பாளையம் மீன் மாா்க்கெட்டில் மாவட்ட உண... மேலும் பார்க்க

அவிநாசியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் மீட்பு

அவிநாசியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய இளைஞரை போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவிநாசி- பழங்கரை புறவழிச் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த வெட்டுக் காயங்களுடன் இளை... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்குவதில் திருப்பூா் மாவட்டம் முன்மாதிரி! -ஆ.ராசா

தமிழகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் திருப்பூா் மாவட்டம் முன்மாதிரியாக உள்ளதாக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா். சேவூா் அருகே பாப்பாங்குளம் பகுதியில் 151 பேருக்கு இலவச வீட்டுமனை ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்

மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சாயும் நிலையில் சிக்னல் கம்பம்

வெள்ளக்கோவில் நகரில் சாயும் நிலையில் சிக்னல் கம்பம் சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வெள்ளக்கோவில்- கரூா் சாலையில் மூலனூா் பிரிவில் சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே நூற்றுக... மேலும் பார்க்க

மழையால் வாரச் சந்தை வியாபாரம் பாதிப்பு

வெள்ளக்கோவில் வாரச்சந்தை வியாபாரம் மழையால் பாதிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நகராட்சி வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இ... மேலும் பார்க்க