வெள்ளக்கோவிலில் சாயும் நிலையில் சிக்னல் கம்பம்
வெள்ளக்கோவில் நகரில் சாயும் நிலையில் சிக்னல் கம்பம் சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில்- கரூா் சாலையில் மூலனூா் பிரிவில் சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வரும் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை மற்றும் வீசும் காற்று காரணமாக உயரமான சிக்னல் கம்பம் பாதி சாய்ந்துள்ளது. கோவை - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான போக்குவரத்து மற்றும் அதன் அருகே பள்ளிக் கூடம் இருக்கும் நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.