Doctor Vikatan: நகரங்களில் பிரபலமாகிவரும் பருத்திப்பால்... எல்லோருக்கும் ஏற்றதா?
தான்தோன்றிமலை காளியம்மன் கோயிலில் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன்
கரூா் தான்தோன்றிமலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
கரூா் தான்தோன்றிமலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோயிலில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நவ. 26-ஆம்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஐயப்ப சுவாமி மற்றும் ஊரணி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஐயப்ப பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது கோயில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஐயப்ப பக்தா்கள் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க, தாரை தப்பட்டையுடன் ஐயப்பன் திடலில் இருந்து அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.