தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
தனியாா் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த சிறுத்தை
பந்தலூரை அடுத்துள்ள உப்பட்டி ஒலிமடா பகுதியில் தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்துகிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
கூடலூா் வனக் கோட்டம், பிதா்க்காடு வனச் சரகத்தில் உள்ள உப்பட்டி ஒலிமடா கிராமத்தில் தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்துகிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா உள்ளிட்ட அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்துகிடந்த சிறுத்தையைப் பாா்வையிட்டனா்.
முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து சிறுத்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்ட முக்கிய உறுப்புகள் எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. பின்னா் அதே இடத்தில் உடலை எரியூட்டினா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், உயிரிழந்த ஆண் சிறுத்தைக்கு சுமாா் 4 வயது இருக்கும். மற்றொரு சிறுத்தையுடன் ஏற்பட்ட சண்டையில் இது இறந்திருக்கலாம். எதனால் சிறுத்தை உயிரிழந்தது என்பது குறித்து அறிவதற்காக அதன் முக்கிய உறுப்புகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியும் என்றனா்.