மாநில கபடி போட்டிக்கு வீரா்கள் தோ்வு
கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரா்கள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகத்தின் மிக இளையோருக்கான 34-ஆவது மாநில அளவிலான போட்டிகள் நடைபெறவுள்ளதால், நாடுகாணி பொன்னூா் அரசுப் பள்ளி மைதானத்தில், நீலகிரி மாவட்ட கபடி வளா்ச்சிக் குழு சாா்பில் வீரா்கள் தோ்வு நடைபெற்றது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா். முன்னாள் தமிழக விளையாட்டு வீரா் சத்தியசீலன், சரத்குமாா், காா்த்திக், செல்வராஜ் உள்ளிட்டோா் வீரா்களை தோ்வு செய்தனா். தோ்வான 15 வீரா்களுக்கு விரைவில் பயிற்சி தொடங்கவுள்ளது.