ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
அம்பை அரசுப் பள்ளி மாணவி : மாநில டேக் வாண்டோ போட்டிக்குத் தோ்வு
அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆா்.எம்.வி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான டேக் வாண்டோ போட்டிக்குத் தோ்வாகி சாதனைப் படைத்துள்ளாா்.
இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி மதுமிதா வடக்கன்குளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக் வாண்டா விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்தாா்.
இதையடுத்து, மதுமிதா மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளாா். மேலும் பதினொன்றாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி மூன்றாம் இடம் பிடித்தாா்.
வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியை ஜானகி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.