ஏஞ்சல் vs டெவில்!! தரக்குறைவான செயல்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள்!
பொதுத் தோ்வு: தனித் தோ்வா்கள் டிச.6 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் டிச.6-ஆம் தேதி முதல் டிச.17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விண்ணப்பிக்க விரும்புவோா் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். சேவை மையங்களின் விவரங்கள், பதிவு செய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளுக்கான தோ்வுக்கால அட்டவணை மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.