செய்திகள் :

Farmers Protest: `விவசாயிகள் பொறுமையை சோதிக்க முயன்றால்...' - மத்திய அரசை எச்சரிக்கும் துணை ஜனாதிபதி

post image
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டம் கொண்டு வருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, வேளாண் சட்டங்களை விவசாயிகளின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் திரும்பப்பெற்ற பாஜக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமலிருக்கிறது.

Farmers Protest | விவசாயிகள் ‘டெல்லி சலோ’ போராட்டம்

இதனால், கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் முயன்றனர். ஆனால், ஏதோ தீவிரவாதிகளைத் தடுப்பதுபோல டெல்லி எல்லையில் இரும்பு முள் வேலிகள், கான்கிரீட் சுவர்கள் போன்றவை அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் போலீஸ் மற்றும் ராணுவத்தினரைக் குவித்து விவசாயிகளைத் தடுத்தது பாஜக அரசு. அதைத் தொடர்ந்து, பஞ்சாப் ஹரியானா எல்லையில் விவசாயிகள் குழுக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அவர்கள், தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்த டிசம்பர் 6-ம் தேதி டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதேபோல், கடந்த திங்களன்று டெல்லியை நோக்கி அணிவகுப்பு மேற்கொண்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நொய்டா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவ்வாறு, விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துகொண்டிருக்கும் நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

அந்த நிகழ்ச்சியில் நாட்டின் குடியரசுத் துணை தலைவர் ஜெக்தீப் தன்கரும் பங்கேற்றிருந்தார். அப்போது, மேடையில் சிவராஜ் சிங் சவுகானைக் குறிப்பிட்டுப் பேசிய ஜெக்தீப் தன்கர், ``வேளாண் துறை அமைச்சரே, உங்களுக்கு முன்பிருந்த அமைச்சர் விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஏதேனும் வாக்குறுதி அளித்தாரா? அவ்வாறு அளிக்கப்பட்டிருந்தால் அவை என்ன ஆனது? விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நம்மால் எல்லையை உருவாக்க முடியுமா? விவசாயிகளிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதே எனக்குப் புரியவில்லை.

என்னுடைய கவலையே, இதற்கான முயற்சிகள் ஏன் இதுவரை நடக்கவில்லை என்பதுதான். நீங்கள்தான் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கிறீர்கள். இந்த நேரத்தில், சர்தார் படேலையும், நாட்டை ஒருங்கிணைப்பதில் அவரின் பொறுப்பையும் நான் நினைவுகூர்கிறேன். அதை அவர் சிறப்பாகச் செய்தார். அதுபோல, விவசாயிகள் பிரச்னை உங்கள் முன் இருக்கிறது. இந்தச் சவாலை, நாட்டை ஒருங்கிணைப்பதைக் காட்டிலும் குறைவானது என்று கருதக் கூடாது.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் ஏன் துயரத்தில் இருக்கிறார்கள், மன அழுத்தத்தில் இருக்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள் என்பது தீவிரமான பிரச்னை. இதை நாம் எளிதாக எடுத்துக்கொள்வது, நாம் நடைமுறையில் இல்லை என்றும், கொள்கைகளை நாம் சாதியான பாதையில் வகுக்கவில்லை என்றும் அர்த்தம். விவசாயிகளின் குரலை எந்த சக்தியாலும் நசுக்க முடியாது. மேலும், விவசாயிகளின் பொறுமையைச் சோதிக்க முயன்றால் நாடு மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்." என்று எச்சரித்திருக்கிறார்.

DMK: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புது பாலம், காரணம் ஏற்புடையதா? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* இந்தி கற்பிப்பவர்களை நிர்மலா சீதாராமன் கேலி செய்தார்.* வட இந்திய எம்.பி.க்களை தமிழில் கோஷம் எழுப்ப திருச்சி சிவா சமாளித்தாரா?* டங்ஸ்டன் சுரங்கம்: மக்களவையில் எஸ்.வேலாய... மேலும் பார்க்க

`விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு' - விருதுடன் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி

டெல்லியில், கடந்த நவம்பர் 30-ம் தேதி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், FICCI Turf 2024, 14-வது விளையாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டுக்கான இந்திய விளையாட்டு விருத... மேலும் பார்க்க

`சிறுபான்மையினர் நிலை குறித்து கவலை தெரிவித்தேன்; ஆனால் மோடி..'- ஏஞ்சலா மெர்க்கல் எழுதியிருப்பதென்ன?

ஜெர்மனியின் முதல் பெண் அதிபரும், ஜெர்மன் வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது அதிபர் என்ற பெருமைக்கும் உரியவர் ஏஞ்சலா மெர்க்கல். இவர் எழுதியுள்ள சுயசரிதையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது ... மேலும் பார்க்க