போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் வியாழக்கிழமை (டிச.5) மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ அமைப்பு மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (டிச.4) மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட விருந்தது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், இறுதிகட்ட சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் சில தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ராக்கெட் ஏவுதல் வியாழக்கிழமை (டிச. 5) மாலை 4.04 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.