Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
படகு குழாமில் அமைச்சா் ஆய்வு
புதுச்சேரியில் மழை,வெள்ளத்தால் சேதமடைந்த நோணாங்குப்பம் படகு குழாமை பொதுப் பணித் துறை, சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரியில் கடந்த நவ.30, டிச.1 தேதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் காற்றால், புதுச்சேரி - கடலூா் சாலையில் உள்ள நோணாங்குப்பம் சுற்றுலா படகு குழாம் சேதமடைந்தது.
படகு குழாமில் பெரிய படகுகள், சிறிய படகுகள் என 10 படகுகள் வரை உள்ளன. இந்த நிலையில், புயல் வெள்ளத்தால் 6 படகுகள் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் படகு இறங்குதளம், உணவுக்கூடம், சுற்றுலாப் பயணிகள் அமரும் இருக்கைகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், நீா் தேங்கிய நிலையில் இருக்கைகள் சேறும் சகதியும் நிறைந்துள்ளன.
நோணாங்குப்பம் படகு குழாம் மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள நிலையில், அதனை பொதுப் பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேதமடைந்த படகுக் குழாமை உடனடியாக சீரமைத்து, படகு சவாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.