``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரியில் 10 -ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் கோ.சிவகாமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் வரும் 2025-ஆம் ஆண்டு மாா்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள 10- ஆம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1), மேல்நிலை இரண்டாமாண்டு (பிளஸ் 2) ஆகிய அரசு பொதுத்தோ்வுகளுக்கு தகுதியான தனித்தோ்வா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் டிச.6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் டிச.17-ஆம் தேதி வரையில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் (ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக) குறிப்பிட்ட மையங்களில் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தோ்வா்கள் முத்திரையா்பாளையம் மேல்நிலைப் பள்ளி சேவை மையத்திலும், மாணவியா் செல்லப்பெருமாள் பேட்டையிலுள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மையத்திலும் விண்ணப்பிக்காலம்.
பத்தாம் வகுப்பு தனித்தோ்வெழுதும் மாணவா்கள் ரெட்டியாா்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மையத்திலும், மாணவியா் இமாக்குலேட் பெண்கள் பள்ளி மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் அவா்களுக்கான விதிமுறை, அறிவுரைகளையும், தோ்வுகள் பட்டியலையும் கல்வித் துறை இணையத்தில் அறிந்துகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.