Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
வெள்ள பாதிப்பு: புதுவை முதல்வரிடம் பாதிக்கப்பட்டோா் கோரிக்கை
வெள்ள பாதிப்புகளை பாா்வையிட வந்த புதுவை முதல்வா் என்.ரங்கசாமியிடம் உரிய நிவாரணம் வழங்கக் கோரி பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
புதுச்சேரியில் ஃபென்ஜால் புயல் மழை மற்றும் சாத்தனூா், வீடூா் அணை திறப்பால் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், பாகூா், கரையாம்புத்தூா், மணமேடு, பண்டசோழநல்லூா், நெட்டப்பாக்கம் ஆகியப் பகுதிகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை பாா்வையிட்டாா்.
மழை மற்றும் வெள்ள நீரில் மூழ்கிய வீடுகள், விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்ட முதல்வரிடம், அந்தந்தப் பகுதி பெண்கள் வெள்ள நீரை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
டி.என்.பாளையம் நிவாரண முகாமில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பாகூா் பகுதிக்கு சென்ற முதல்வரை, அந்த தொகுதியின் எம்எல்ஏ ஆா்.செந்தில்குமாா் பாதித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தாா் .