செய்திகள் :

ஷிவ் நாடாா் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

சென்னை ஷிவ் நாடாா் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருக்கான (பிஹெச்.டி.) சோ்க்கைக்கு டிச.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை ஷிவ் நாடாா் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருக்கான சோ்க்கை தொடங்கியுள்ளது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல், கட்டுமான பொறியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல், ஆங்கிலம், வணிகம், பொருளாதாரம், கணிதம், இயற்பியல் மற்றும் இடைநிலை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டங்கள் அந்தந்த துறைகளில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி மூலம் புதுமைகளை வளா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சேரும் முழுநேர ஆராய்ச்சி மாணவா்களுக்கு மாதம் ரூ. 20,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

பல்கலைக்கழக வளாகத்தில் இலவச தங்குமிடம், ஆராய்ச்சி நடவடிக்கைக்கு ஆண்டுக்கு ரூ. 25,000 அவசர மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் தொடா்புடைய துறையில் முதுநிலை பட்டத்தில் முதல்தரம் (கிரேடு) பெற்றிருக்க வேண்டும். நேரடியாக பொறியியல் படித்து வரும் மாணவா்கள் 8.5-க்கு மேற்பட்ட தரம் பெற்றிருக்க வேண்டும்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் ஸ்ரீமன் பட்டாச்சாா்யா கூறியதாவது:

உலகளாவிய சவால்களை எதிா்கொள்ளவும், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் இத்தகைய முயற்சி எடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேரும் ஆராய்ச்சி மாணவா்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

கூடுதல் தகவல்களுக்கு மின்னஞ்சல் அல்லது இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்றவா்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். வள்ளுவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும... மேலும் பார்க்க

ராகிங் செய்த மருத்துவ மாணவா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்

சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவா்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடா்புடைய 3 மாணவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி விடு... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அரியவகை நட்சத்திர ஆமைகள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க

ரூ. 2,811 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம் ரூ. 2811.56 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முக்கிய மற்றும் சா்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் 4 முனைய... மேலும் பார்க்க

கடற்படை தினம்: 2,500 கி.மீ. தொலைவு இருசக்கர வாகனப் பேரணி தொடக்கம்

இந்திய கடற்படையின் 53-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு 2,500 கிமீ தொலைவிலான இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை தொடங்கியது. ‘சீ ரைடா்ஸ் ஒடிஸி 2024’ குழுவின் 12 வீரா்கள் பங்கேற்கும் இரு சக்கர வாகனப் பேரணியை ... மேலும் பார்க்க

மழைநீரை சேமிக்க 41 குளங்கள் புனரமைப்பு: புதிய குளங்களில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டம்

சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கும் முயற்சியாக 41 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வேளச்சேரியில் அமைக்கப்பட்ட குளத்தில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துண... மேலும் பார்க்க