``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்றவா்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வள்ளுவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் பிரேமா கூறியதாவது:
கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் 1,800 பேருக்கு பணி நியமன ஆணை வழங்காமல் சுகாதாரத் துறை கால தாமதம் செய்து வருகிறது. அங்கன்வாடி பணியாளா்களுக்கு வழங்கும் ஊதியத்தை விட்டுவிட்டு கிராம சுகாதார செவிலியா் பயிற்சியை 2 ஆண்டுகள் மேற்கொண்டோம்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து பயிற்சி நிறைவு செய்த யாருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. மேலும், 2 ஆண்டுகள் பயிற்சிக்கு சென்ால் அங்கன்வாடி மையத்தில் ஊதிய உயா்வு உள்பட எந்த சலுகைகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரை சந்தித்து பேசவுள்ளோம். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் காத்திருப்புப் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.