``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
கடற்படை தினம்: 2,500 கி.மீ. தொலைவு இருசக்கர வாகனப் பேரணி தொடக்கம்
இந்திய கடற்படையின் 53-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு 2,500 கிமீ தொலைவிலான இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை தொடங்கியது.
‘சீ ரைடா்ஸ் ஒடிஸி 2024’ குழுவின் 12 வீரா்கள் பங்கேற்கும் இரு சக்கர வாகனப் பேரணியை தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை பகுதியின் அதிகாரி (பொ) கமாண்டா் சுவரத் நாகோன் சென்னை காமராஜா் சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னம் அருகில் தொடங்கிவைத்தாா்.
13 நாள்கள் நடைபெறவுள்ள இரு சக்கர வாகனப் பேரணி சென்னையில் தொடங்கி புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, காரைக்குடி, தனுஷ்கோடி, ராமேசுவரம், வள்ளியூா், மதுரை, கொடைக்கானல், அமராவதிபுதூரில் உள்ள சைனிக் பள்ளி, கோவை, வெலிங்டன், சேலம், வேலூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற பின்னா் டிச.16-ஆம் தேதி மீண்டும் சென்னை வந்தடையும்.
பேரணியில் பங்கேற்கும் கடற்படை வீரா்கள், வழியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாரம்பரிய தலங்களுக்குச் சென்று கடற்படையின் திறன்கள், சாதனைகள் போன்றவற்றையும், கடற்படையில் சோ்வது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவா்.
முன்னதாக, இந்திய கடற்படையில் பணியாற்றி உயிா் நீத்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை போா் நினைவுச் சின்னத்தில் கமாண்டா் சுவரத் நாகோன், மூத்த அதிகாரிகள் மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினா்.
கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போரில், ‘கராச்சி’ துறைமுகத்தில் இந்திய கடற்படை மேற்கொண்ட ‘ஆபரேஷன் ட்ரைடன்ட்‘ வெற்றியின் நினைவாக ஆண்டுதோறும் டிச.4-ஆம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.