`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அரியவகை நட்சத்திர ஆமைகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை காலை பாங்காக்கிலிருந்து வந்த விமானப் பயணிகளையும் அவா்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, ஆண் பயணி ஒருவா் வைத்திருந்த 5 பிளாஸ்டிக் டப்பாக்களை சோதனையிட்டபோது, அதில் சுமாா் 500 அரியவகை நட்சத்திர ஆமைகள் இருந்தன.
விசாரணையில், பாங்காங்கிலிருந்து நட்சத்திர ஆமைகளை விலைக்கு வாங்கி வருவதாக தெரிவித்து, அதற்கான விலைப்பட்டியலை காண்பித்துள்ளாா். ஆனால், அரியவகை உயிரினங்களை ஒரு நாட்டிலிருந்து பிாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் மருத்துவத் துறையின் ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், வனத் துறையினா் உதவியுடன் அவற்றை மீண்டும் பாங்காங் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.