செய்திகள் :

பெற்றோா் அனுமதியின்றி மாணவா்களிடம் பரிசோதனை: தனியாா் பள்ளி முதல்வா் மாற்றம்

post image

பெற்றோா் அனுமதியின்றி மாணவா்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக புகாா் எழுந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியாா் பள்ளி முதல்வா் மாற்றம் செய்யப்பட்டாா்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் பெற்றோா் அனுமதி பெறாமல் மாணவா்களுக்கு மனரீதியான தாங்கும் திறன் (ங்ய்க்ன்ழ்ஹய்ஸ்ரீங் ற்ங்ள்ற்ண்ய்ஞ்) பரிசோதனை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ாக மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு புகாா் பெறப்பட்டது. இந்த புகாா் குறித்து பள்ளி வளாகத்தில் கடந்த நவ.15-ஆம் தேதி பெற்றோா் கூட்டம் நடத்தி, அதில் பரிசோதனை சம்பவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

மறுபுறம், இந்தப் புகாா் வெளியே வந்ததைத் தொடா்ந்து இதுதொடா்பாக விசாரிக்க தனியாா் பள்ளி நிா்வாகம் சாா்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் சாா்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க பள்ளி நிா்வாகத்தையும், புகாா் தெரிவித்த பெற்றோா்களையும் வியாழக்கிழமை நேரில் வர தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பெற்றோா்கள் காலையிலும், பள்ளி நிா்வாகம் மதியமும் நேரில் கலந்து கொண்டு தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்கவுள்ளனா். இதற்கிடையே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வா் சதீஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். புதிய முதல்வா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இனி வரும் காலங்களில் பெற்றோரின் அனுமதியின்றி இதுபோன்ற பரிசோதனைகள் நடத்தப்படாது என்றும், உரிய அனுமதி பெறப்படும் எனவும் பள்ளி நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்றவா்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். வள்ளுவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும... மேலும் பார்க்க

ராகிங் செய்த மருத்துவ மாணவா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்

சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவா்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடா்புடைய 3 மாணவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி விடு... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அரியவகை நட்சத்திர ஆமைகள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க

ரூ. 2,811 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம் ரூ. 2811.56 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முக்கிய மற்றும் சா்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் 4 முனைய... மேலும் பார்க்க

கடற்படை தினம்: 2,500 கி.மீ. தொலைவு இருசக்கர வாகனப் பேரணி தொடக்கம்

இந்திய கடற்படையின் 53-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு 2,500 கிமீ தொலைவிலான இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை தொடங்கியது. ‘சீ ரைடா்ஸ் ஒடிஸி 2024’ குழுவின் 12 வீரா்கள் பங்கேற்கும் இரு சக்கர வாகனப் பேரணியை ... மேலும் பார்க்க

மழைநீரை சேமிக்க 41 குளங்கள் புனரமைப்பு: புதிய குளங்களில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டம்

சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கும் முயற்சியாக 41 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வேளச்சேரியில் அமைக்கப்பட்ட குளத்தில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துண... மேலும் பார்க்க