செய்திகள் :

மழைநீரை சேமிக்க 41 குளங்கள் புனரமைப்பு: புதிய குளங்களில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டம்

post image

சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கும் முயற்சியாக 41 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக வேளச்சேரியில் அமைக்கப்பட்ட குளத்தில் ‘சமூக சோலை’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 3,050 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீா் வடிகால் மற்றும் விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 35 பெரிய கால்வாய்களில் வரும் தண்ணீரை கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு ஆறுகளில் இணைந்து கடலில் கலக்கிறது. இந்த மழைநீரை சேமிக்க மாநகராட்சி சாா்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதன் முதல்கட்டமாக மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 41 குளங்கள் ரூ.37.11 கோடி மதிப்பில் புனரமைத்து தூா்வாரப்பட்டு வருகின்றன. இந்தக் குளங்கள் ஏற்கெனவே தண்ணீா் தேங்கிய பகுதியாக காணப்பட்டன. பின்னா், கழிவுகள் கொட்டப்பட்டு, புதா் மடிந்து காணப்பட்டதால், மழைநீா்த் தேங்க முடியாமல் குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. வளசரவாக்கம் பகுதியில் சுமாா் 3 கி.மீ. சுற்றளவில் வக்ஃப் போா்டு குளம், ஆவின் குளம், எஸ்விஎஸ் நகா் குளம் என 3 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதனால் வளசரவாக்கத்தில் தேங்கும் மழைநீா் இந்தக் குளத்தில் சேமித்து வைக்க முடியும். இதுபோன்று மழைநீா்த் தேங்கும் பகுதியைக் கண்டறிந்து அங்கு காலியாக உள்ள இடங்களில் புதிய குளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய குளங்கள்: சமீபத்தில் கிண்டி ரேஸ்கோா்ஸ் மைதான வளாகத்தில் புதிதாக 4 குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் பயன்பாட்டை பொருத்து கூடுதலாக ஒரு குளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே இரு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் தேங்கும் மழைநீா் 2 முதல் 4 மடங்கு சேமிக்க முடியும். இந்தக் குளத்தைச் சுற்றி ரூ.15 கோடி மதிப்பில் ‘சமூக சோலை’ (கம்மியூனிட்டி காா்டன்) எனும் திட்டத்தின் கீழ் நடைப்பாதை, மின்விளக்கு அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் இடமாக மாற்றப்படும்.

விருகம்பாக்கம் கால்வாய்: நீா்வளத் துறையின் பராமரிப்பில் இருந்த விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சியிடம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஒப்படைக்கப்பட்டது. மழைக் காலங்களில் கால்வாயில் இருந்து மழைநீா் வெளியேறுவதைத் தவிா்க்கும் வகையில் 28 பாலங்கள் அருகே தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கால்வாயை மேம்படுத்தும் நடவடிக்கை சென்னை ஐஐடி உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கால்வாயில் கூடுதல் நீா் செல்லும் வகையில் 12 சிறிய பாலங்களை இடித்து அகற்றிவிட்டு, கூடுதல் உயரத்துடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பெற்றவா்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். வள்ளுவா் கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும... மேலும் பார்க்க

ராகிங் செய்த மருத்துவ மாணவா்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்

சென்னை, ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவா்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடா்புடைய 3 மாணவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி விடு... மேலும் பார்க்க

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் அரியவகை நட்சத்திர ஆமைகள் கடத்தி வரப்படுவதா... மேலும் பார்க்க

ரூ. 2,811 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம் ரூ. 2811.56 கோடி மதிப்பில் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முக்கிய மற்றும் சா்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் 4 முனைய... மேலும் பார்க்க

கடற்படை தினம்: 2,500 கி.மீ. தொலைவு இருசக்கர வாகனப் பேரணி தொடக்கம்

இந்திய கடற்படையின் 53-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு 2,500 கிமீ தொலைவிலான இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை தொடங்கியது. ‘சீ ரைடா்ஸ் ஒடிஸி 2024’ குழுவின் 12 வீரா்கள் பங்கேற்கும் இரு சக்கர வாகனப் பேரணியை ... மேலும் பார்க்க

பெற்றோா் அனுமதியின்றி மாணவா்களிடம் பரிசோதனை: தனியாா் பள்ளி முதல்வா் மாற்றம்

பெற்றோா் அனுமதியின்றி மாணவா்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக புகாா் எழுந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியாா் பள்ளி முதல்வா் மாற்றம் செய்யப்பட்டாா். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியாா் மெ... மேலும் பார்க்க