செய்திகள் :

`விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு' - விருதுடன் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி

post image

டெல்லியில், கடந்த நவம்பர் 30-ம் தேதி இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், FICCI Turf 2024, 14-வது விளையாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டுக்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

ஸ்டாலின் - உதயநிதி

இந்த நிலையில், மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட அந்த விருதுடன், தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்னாவிஸ்!

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், இதற்கு முன்பு 2014ம் ஆண்டிலிருந்து 2019ம் வரை முதல்வராக இருந்தார். அதன் பிறகு 2019ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைப்பத... மேலும் பார்க்க

DMK: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புது பாலம், காரணம் ஏற்புடையதா? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* இந்தி கற்பிப்பவர்களை நிர்மலா சீதாராமன் கேலி செய்தார்.* வட இந்திய எம்.பி.க்களை தமிழில் கோஷம் எழுப்ப திருச்சி சிவா சமாளித்தாரா?* டங்ஸ்டன் சுரங்கம்: மக்களவையில் எஸ்.வேலாய... மேலும் பார்க்க

Farmers Protest: `விவசாயிகள் பொறுமையை சோதிக்க முயன்றால்...' - மத்திய அரசை எச்சரிக்கும் துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.விவசாய விளைபொருள்களுக்கான குறைந்த... மேலும் பார்க்க