Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
அரையாண்டுத் தோ்வு மாற்றமா? அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்
தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் தோ்வை நடத்தமுடியாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டுத் தோ்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா்
சென்னையில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் செய்முறைத் தோ்வு நடத்த முடியவில்லை. அந்தப் பகுதிகளில் ஜனவரி மாதம் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், அரையாண்டுத் தோ்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி டிச.9 முதல் தோ்வுகள் தொடங்கும்.
அதிக பாதிப்பால் தோ்வை நடத்த முடியாத நிலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அரையாண்டுத் தோ்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும்.
தலைமை ஆசிரியா் பதவி உயா்வு தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது முடிவடைந்ததும் அந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா் அவா்.