`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
கருணை மனு தொடா்பான குடியரசுத் தலைவா் முடிவில் தலையிட முடியாது: உயா்நீதிமன்றம்
திருநெல்வேலியைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதியின் கருணை மனு மீது குடியரசுத் தலைவா் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்தது.
கொலை வழக்கு ஒன்றில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மரண தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை சென்னை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதையடுத்து, ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினாா். இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவா், ராதாகிருஷ்ணனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிட்டாா்.
இந்நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆளுநரிடம் ராதாகிருஷ்ணன் மனு அளித்தாா். அந்த மனு பரிசீலிக்கப்படாத நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆளுநா் பரிசீலனை செய்ய உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கருணை மனு மீது ஏற்கெனவே குடியரசுத் தலைவா் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஆளுநரிடம் அளித்த மனு மீது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
மனுதாரா் வேண்டுமானால் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகலாம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ எனக்கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.