செய்திகள் :

UP: ``என் கடமையை தடுக்கின்றனர்'' - தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

post image

ஹாஜி ஜாமா பள்ளிவாசல் வழக்கைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் சம்பால் பகுதியில் வன்முறை எழுந்தது. காவல்துறையினர் மற்றும் பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுக்கள் இடையிலான வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். 20 காவலர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (டிசம்பர் 4) சந்திக்க திட்டமிட்டிருந்தார். வன்முறையில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க விருந்தார். ஆனால் அந்த மாவட்டத்துக்குள் வெளி நபர்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

UP: What Rahul Gandhi Said About Refused Entry to Sambhal

ராகுல் காந்தியுடன் வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர், 6 எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவிருந்தனர். அனைவருமே காஸிபூர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "நம் நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தீர்மானித்தோம். உ.பி அரசாங்கம் எங்கள் குழுவை அனுமதிக்க வேண்டும்" என ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், ராகுல் காந்தி மட்டும் தனியாக செல்வதற்கான கோரிக்கையையும் உ.பி அரசு மறுத்துள்ளது.

"எதிர்கட்சித் தலைவராக பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது என் கடமையும் பொறுப்பும் கூட. எனது வேலை மற்றும் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து என்னைத் தடுக்கின்றனர்" எனக் கூரியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் டெல்லி-உத்தரபிரதேசம் எல்லையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர், டெல்லிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.

முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் சிவன் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதை முன்னிட்டு பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வுக்கு உத்தரவிட்டது. ஆய்வாளர்கள் பள்ளிவாசல் சென்றதை முன்னிட்டு வன்முறை வெடித்தது.

உச்சநீதிமன்றம் ஆய்வு முடிவுகள் வெளியாவதை தடுத்து நிறுத்தியதுடன் அகலாபாத் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு நாயுடு வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 6 மாதங்களில், முன்பு சந்திரபாபு நாயுடு தொடர்பான வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட... மேலும் பார்க்க

South Korea: `நேற்று ராணுவ ஆட்சி அமல்... இன்று வாபஸ்' - என்ன நடக்கிறது தென் கொரியாவில்?!

'இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், ரஷ்ய - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி... என ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் உலக அரசியல் களத்தை இன்னும் பரப்பாக்கியது, தென் கொரியாவின் 'ராணுவ ஆட்சி அமல்' அறிவிப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்... முடிவுக்கு வந்த இழுபறி..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீ... மேலும் பார்க்க

பஞ்சாப்: மத தண்டனைக்குள்ளான முன்னாள் துணை முதல்வர்; துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பியது எப்படி?

பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். இந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல். 2007 - 2017-வரை சிரோமணி அகாலி தளம் கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருந்தது. ... மேலும் பார்க்க

Railway union election: `என் நிர்வாகிகள் தவறாக நடந்திருந்தால் மறந்துடுங்க!' - SRMU கண்ணையா

ரயில்வேயில் தொழிற்சங்கங்கங்களை அங்கீகரிப்பதற்கான தேர்தல் நாடு முழுக்க இன்றும் நாளையும் நடக்கிறது.ஆறு வருடத்துக்கொரு முறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் 2019-லேயே நடந்திருக்க வேண்டியது. ரயில்வே நிர்வாகம்... மேலும் பார்க்க

Ponmudi: சேறு வீசப்பட்டதன் பின்னணி என்ன..? - அமைச்சர் பொன்முடி சொன்ன விளக்கம்!

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டம், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 10-க்க... மேலும் பார்க்க