மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு விஜய் நிவாரண உதவி
சென்னை: மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவா் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினாா்.
கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை செவ்வாய்க்கிழமை அவா் வழங்கினாா்.
முன்னதாக, விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில், புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அதிக அளவு ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடா் மீட்புப் படைகளைத் தயாா் நிலையில் வைத்திருப்பது அவசியம்.
அங்கு மலையடிவாரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவா்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா் அவா்.