ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர ஃபட்னவீஸ்!
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்காக மும்பையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார் பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ்.
மகாராஷ்டிரா முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மேலிடப் பாா்வையாளராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோா் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வராக (சட்டப்பேரவை பாஜக தலைவராக) தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுலுக்கு உரிமை உள்ளது: பிரியங்கா காந்தி
தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டணித் தலைவா்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியமைக்க உள்ள நிலையில், நாளை(டிச. 8) தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவியேற்கிறார்.