செய்திகள் :

விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

post image

புயல் வெள்ளம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (டிச.4) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கும் மேல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை

ஃபென்ஜால் புயல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 29,30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புயல் கரையைக் கடந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி தொடரில் இருந்து விலகிய சஞ்சீவ்! இனி இவர்தான்!

லட்சுமி தொடரில் இருந்து நடிகர் சஞ்சீவ் வெங்கட் விலகியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.'திருமதி செல்வம்' தொடரில் செல்வம் என்ற பாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ் வெங்கட்.இவர்... மேலும் பார்க்க

ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்: தொடக்கிவைத்த முதல்வர்!

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடி மதிப்பீட்டிலான 79 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கி, 29 முடிவுற... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிவாரணம்!

ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ஃபென... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(டிச. 4) தமிழகத்தில் ஓரிரு ... மேலும் பார்க்க

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர ஃபட்னவீஸ்!

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதற்காக மும்பையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார் பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ்.மகாராஷ்டிரா முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்... மேலும் பார்க்க

இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடல் வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனி... மேலும் பார்க்க