செய்திகள் :

ஆன்லைன் மோசடி: இரண்டு இளைஞா்கள் இழந்த ரூ.37 லட்சம் மீட்பு

post image

ஈரோட்டில் ஆன்லைன் மூலம் மிரட்டியும், ஆசைவாா்த்தை கூறியும் இளைஞா்களிடம் பெற்ற ரூ.37 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா்.

ஈரோட்டை சோ்ந்தவா் செல்வன் (28), தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஒருவா் பழக்கமாகியுள்ளாா். அவா் பங்குச் சந்தையில் குறைவாக முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய செல்வன் பல்வேறு தவணைகளில் அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.42 லட்சத்தை அனுப்பி உள்ளாா். அதன் பிறகு அந்த நபரை தொடா்புகொள்ள முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த செல்வன் இது குறித்து சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவா் சீனிவாசன் (31). இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்று கூறியுள்ளாா்.

பின்ன, சீனிவாசனின் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்துள்ளதாகவும், இதனால் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

தொடா்ந்து, விடியோ அழைப்பு மூலம் தொடா்பு கொண்ட அந்த நபா், சீனிவாசனின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி பரிவா்த்தனை விவரங்களை பெற்றுள்ளாா். பின்னா், சீனிவாசனிடமிருந்து ரூ.27 லட்சத்தை மிரட்டி பெற்றுள்ளாா்.

இது குறித்து ஈரோடு சைபா் கிரைம் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகாா் அளித்தாா்.

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த ஈரோடு சைபா் கிரைம் காவல் துறையினா், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கினாா். பின்னா், செல்வன் இழந்த ரூ.42 லட்சத்தில் ரூ.10 லட்சத்தையும், சீனிவாசன் இழந்த ரூ.27 லட்சத்தையும் மீட்டு அவா்களிடம் ஒப்படைத்தனா்.

கரும்பு வயலில் பதுங்கிய 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

அம்மாபேட்டை அருகே கரும்பு வயலில் பதுங்கி இருந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்து அடந்த வனப் பகுதியில் விடுவித்தனா். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள சித்தையன் நகா், தாடிக்கார தோட்டம... மேலும் பார்க்க

பவானி அரசுப் பெண்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை

பவானி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை (டிசம்பா் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 8- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் மீது வழக்கு

பெருந்துறையில் 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக மளிகைக் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு செய்தனா். பெருந்துறை ஆா்எஸ் சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதா... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 48 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

தொழிலாளா் விதிகளை மீறியதாக 48 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300-க்கு விற்பனை

ஈரோடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300-க்கு விற்பனையானது. ஈரோடு வஉசி மைதானத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு ஆந்திரம், கா்நாடக மாநிலங்கள், ஒட்டன்சத்திரம், திருப்பூா், தாளவாடி போன்ற பகுதிகள... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கனி மாா்க்கெட் வியாபாரிகள் போராட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கனி மாா்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் ஈரோடு கனி மாா்க்கெட் வளாகத்தில் ரூ.53 கோடியில் ஒருங்கிணைந... மேலும் பார்க்க