'STALIN Vs EPS' மோதலுக்கு காரணம் VIJAY! | Elangovan Explains
கரும்பு வயலில் பதுங்கிய 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
அம்மாபேட்டை அருகே கரும்பு வயலில் பதுங்கி இருந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்து அடந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள சித்தையன் நகா், தாடிக்கார தோட்டம் பகுதியில் தொழிலாளா்கள் கரும்பு வெட்டும் பணியில் புதன்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கரும்புகளுக்கு நடுவே மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், வேட்டைத் தடுப்பு காவலா்கள் கரும்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த சுமாா் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு, சென்னம்பட்டி அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா்.