புகையிலைப் பொருள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் மீது வழக்கு
பெருந்துறையில் 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக மளிகைக் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
பெருந்துறை ஆா்எஸ் சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மகேஷ் (43) என்பவரது மளிகைக் கடையை சோதனை செய்தபோது, அங்கு 43 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்