அதானி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
பவானி அரசுப் பெண்கள் பள்ளிக்கு இன்று விடுமுறை
பவானி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை (டிசம்பா் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானி செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 8- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, முக்கிய நிகழ்வாக தீா்த்தக்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதனால், பாதுகாப்பு கருதி கோயில் அருகில் உள்ள பவானி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கல்வி அலுவலா்களிடம் பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பா ராவ் உத்தரவிட்டுள்ளாா்.