தானியங்கி மஞ்சப் பை இயந்திரம் இயக்கிவைப்பு
சீா்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் தானியங்கி மஞ்சப் பை வழங்கும் இயந்திரம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தானியங்கி மஞ்சப் பை வழங்கும் இயந்திரத்தை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் மஞ்சப் பை வழங்கும் இயந்திரத்தை இயக்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அங்குதன், ரீகன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் ராஜா, ஊராட்சித் தலைவா் சிவக்குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
கொள்ளிடம் பகுதியில் மேலும் சில இடங்களில் இந்த இயந்திரம் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் தெரிவித்தாா்.