13 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவா்கள்
சீா்காழி: புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, 13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப் படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 200 நாட்டுப் படகுகள் மூலம் 5,000 மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனா். இவா்கள், ஃபென்ஜால் புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனா்.
இந்நிலையில், புயல் கரையை கடந்ததைத் தொடா்ந்து, 13 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளா்கள் கூறுகையில், கடந்த 13 நாள்களாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எனவே வேலை இழந்த நாட்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றனா்.