BB Tamil 8: ஜாக்குலின் - தர்ஷிகா இடையே மோதல்; அடிக்க சென்ற சவுந்தர்யா? - என்ன நடந்தது?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 59- வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபத்திற்கு ஆளானாலோ, இல்லை அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட் சிம்பலை கழற்றி கொடுத்து விட வேண்டும் என்பது ரூல்ஸ் ஆக இருக்கிறது. பிறகு அவர்கள் டெவில்ஸ் அணியுடன் சேர்ந்து விடுவார்கள். அதுபோல அதிகமான ஹார்ட் பெறுபவர்கள் இந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கை பெற போகிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷிகா மற்றும் ஜாக்குலின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக நடக்கிறது. ஜாக்லின் சீ போ என்று சொல்ல, அதற்கு தர்ஷிகா என்னை பார்த்து அப்படி சொல்லாத என்கிறார். இருவருக்கும் மோதல் ஏற்பட ஜாக்குலினுக்கு ஆதரவாக சவுந்தர்யா, தர்ஷிகாவிடம் சண்டை போட்டு அடிக்க போகிறார். இந்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.