செய்திகள் :

Bigg Boss: ''எங்க அக்கா பிக்பாஸ் டைட்டில் ஜெயிச்சா..!'' - ஸ்ருதிகா தம்பி ஆதித்யா ஷேரிங்ஸ்

post image

அக்கா ஸ்ருதிகா இந்தி பிக்பாஸில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். ஸ்ருதிகாவின் தம்பி ஆதித்யா, சென்னையில் இரண்டு இடங்களில் 'நெய் இட்லி சாம்பார்' என்கிற ரெஸ்ட்டாரன்ட்டை நடத்தி வருகிறார். `செலிபிரெட்டி ஸ்ருதிகாவைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். அக்கா ஸ்ருதிகா எப்படிப்பட்டவங்க, இந்தி பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ணிடுவாங்களா?’ என்றபடி பேச ஆரம்பித்தோம்.

Shruthika and her brother

''அக்கா ஸ்ருதிகா டெரர் கேரக்டர்ங்க. எங்கம்மாவைப் பார்த்து நான் பயந்ததைவிட எங்கக்காவைப் பார்த்து பயந்ததுதான் அதிகம்'' என்று சிரித்தபடி பேச ஆரம்பித்தார் ஆதித்யா. ''அக்காவுக்கும் எனக்கும் நாலு வருஷம்தான் வித்தியாசம். அதனால, சின்ன வயசுல எப்போ பார்த்தாலும் சண்டைதான் போட்டுக்கிட்டு இருப்போம். அக்கா எதையாவது சொல்லி என்னை வெறுப்பேத்திட்டு சத்தமில்லாம இருப்பா. நான் அப்போ WWE பார்ப்பேன்கிறதால, அதுல வர்ற மாதிரியே பெட்ல இருந்து அக்கா மேல குதித்து, சண்டையெல்லாம் போடுவேன். அப்புறம், அப்பாகிட்ட உதையும் வாங்குவேன். அக்கா கல்யாணமாகிப் போறப்போகூட 'அப்பாடா. இனிமே மொத்த ரூமும் எனக்கு மட்டும்தான்' ஜாலி பண்ணேன். ஆனா, அதுக்கப்புறம் எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. அக்கா, அப்படியே எனக்கு இன்னொரு அம்மா மாதிரி மாறிட்டாங்க. அவளைவிட நான் நல்லா இருக்கணும், பிசினஸ்ல ஜெயிக்கணும்னு ஆசப்பட ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்காக விரதமெல்லாம் இருக்கிறாங்க.

அக்காவுக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர் அதிகம். அதைவிட புத்திசாலித்தனம் அதிகம். அக்காவுக்கு பிடிவாத குணம் ஜாஸ்தி. அது என்ன மாதிரியான பிடிவாதம்னா, அவங்க ஒரு விஷயத்துல இறங்கிட்டா, அதுக்கு நூறு சதவிகிதம் உண்மையா இருப்பாங்க. அதுல ஜெயிச்சே ஆகணும்னு பிடிவாதமா இருப்பாங்க. 'குக் வித் கோமாளி'யில கலந்துக்கப் போறப்போ கூட, 'இது கடவுள் எனக்குக் கொடுத்த வாய்ப்பு. இதுல நான் ஜெயிச்சே ஆகணும்னு சொல்லிட்டுதான் போனாங்க. சொன்ன மாதிரியே ஜெயிச்சிட்டும் வந்தாங்க. அதான் என் அக்கா. இந்தி பிக்பாஸுக்குள்ள போறதுக்கு முன்னாடியும் இதையே தான் சொல்லிட்டுப் போயிருக்காங்க'' என்றவர் தொடர்ந்தார்.

ஸ்ருதிகா

''எங்கப்பாவுக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர் அதிகம். அது அப்படியே அக்காவுக்கு வந்திருக்கு. அம்மா ரொம்ப கண்டிப்பு. அப்பாவை விட அம்மா மூத்தவங்க அப்படிங்கிறதால, வீட்ல அம்மா சொல்றதுதான் சட்டம், சாசனம் எல்லாமே. நைட்டு எட்டரை மணிக்குள்ள ஸ்ருதிகா வீட்டுக்கு வந்திடணும். ஸ்ருதிகா தன்னோட பேட்டிகள் சொன்ன மாதிரியே அவங்களுக்கு கல்யாணமான பிறகுதான் சுதந்திரமே கிடைச்சிதுன்னு சொல்லணும். அதுக்கப்புறம்தான் பிசினஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. குக் வித் கோமாளியில கலந்துக்கிட்டு ஜெயிச்சாங்க'' என்றவரிடம், 'அக்கா குக்கிங் ஷோவுல ஜெயிக்கிறாங்க. தம்பி ஹோட்டல் பிசினஸ்ல இருக்கீங்க. ரெண்டு பேருக்குமே எப்படி சமையல்ல இவ்ளோ ஆர்வம்' என்றோம்.

''எங்க ஃபேமிலியில எல்லாமே ஃபுட் லவ்வர்ஸ்தான். அக்கா நல்லா சமைப்பாங்க. நானும் கடந்த 5 வருஷமா ஹோட்டல் பிசினஸ்ல இருக்கேன். பிக்பாஸ் வருண் அண்ணன் அஸ்வினும் நானும் சேர்ந்துதான் ஹோட்டல் பிசினஸ் பண்ணிட்டிருக்கோம். எவ்ளோ வேலையிருந்தாலும், தினமும் இந்தி பிக்பாஸ் பார்த்திடுவேன். அக்கா நல்லா பெர்ஃபார்ம் பண்ணிக்கிட்டிருக்காங்க. ரொம்ப சரியா பாயின்ட் பாயின்ட்டா பேசுறாங்க. 58 நாள் பிக்பாஸ் வீட்ல இருந்துட்டாங்க. 100 நாளும் இருந்து டைட்டில் வின் பண்ணிட்டா சூப்பரா இருக்கும். பார்க்கலாம்'' என்றபடி சிரிக்கிறார் ஆதித்யா.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

BB Tamil 8: ``என்னை வெளியே விடுங்க நான் போறேன்..."- அலறும் அன்ஷிதா! - நடந்தது என்ன?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 59- வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டிய... மேலும் பார்க்க

BB Tamil 8: ஜாக்குலின் - தர்ஷிகா இடையே மோதல்; அடிக்க சென்ற சவுந்தர்யா? - என்ன நடந்தது?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 59- வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டி... மேலும் பார்க்க

Archana : `எனக்கு கொலை மிரட்டல்கள் வருது..!' - பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா குற்றச்சாட்டு

கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா இந்த முறை அருண் பிரசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் விஷயங்களுக்காக வெளியில் அர்ச்சனாவை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்... மேலும் பார்க்க

BB TAMIL 8: DAY 57: அம்பலமான ஜாக்குலின், சவுந்தர்யா சுயரூபங்கள் - ஒதுக்கப்படுகிறாரா ராணவ்?!

ஒருவரை பலரும் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் அவர் வலிமையாகிக் கொண்டே போகிறார் என்று பொருள். பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல, உலக நடைமுறைக்கும் இது பொருந்தும். மஞ்சரியின் கதை அப்படித்தான் செல்லும் போ... மேலும் பார்க்க

‘புற்றுநோய் பாதிப்பு' - சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைவு

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `ரஞ்சிதமே' தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நேத்ரன். டான்ஸர், நடிகர் எனப் பன்முகம்கொண்டவர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரைய... மேலும் பார்க்க

Rajini - Super Singer : `ரஜினி ஹிட்ஸ்' - சூப்பர் சிங்கரில் ரஜினி கொடுக்கவிருக்கும் அந்த கிஃப்ட்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கியது.6 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் இந்த மேடையில் தங்... மேலும் பார்க்க