``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
சேலம் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தோ்தல் தொடக்கம்
சேலம் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தோ்தல் புதன்கிழமை தொடங்கியது.
வரும் 6 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் இந்த தோ்தல் நடைபெற உள்ளது. சிஐடியு தொழிற்சங்க ரயில்வே ஊழியா்கள் அமைப்பான டிஆா்இயூ நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிடுகிறது.
ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தோ்தல் சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தோ்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தோ்தல் நடைபெறுகிறது. சேலம் ரயில்வே கோட்ட துணை கோட்ட மேலாளா் சிவலிங்கம் தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆத்தூா், சின்ன சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 8,653 போ் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் டிசம்பா் 12 ஆம் தேதி சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.